S

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான்

அகவை ஒன்பதில்
தந்தையை இழந்தாய்
தமக்கை தங்கைக்கு
தந்தை ஆனாய்
எழுத்தை சுமக்கும் வயதில்
குடும்பத்தை சுமந்தாய்
விளையாடும் வயதில்
வேலைக்கு சென்றாய்
இன்பத்தை பார்க்க
வேண்டிய வயதில்
துன்பத்தை மட்டும்
பார்த்து வளர்ந்தாய்
ஆனால் அதிலும்
இன்பம் கொண்டாய்
உன் முதல் இசையில்
மாநில தேசிய என
இரண்டு விருதுகள்
வைரமணியுடன் சேர்ந்து
எண்ணற்ற வெற்றிகள்
உன் இசையால்
சலம்டாங் என்னும்
படத்தின் மூலம்
பாரத நாட்டையே
உலகிற்கு அறிமுகம் செய்தாய்
இரண்டு ஆஸ்கரை வென்று
தமிழகத்தை உயர்த்தினாய்
எல்லா புகழும் இறைவனுக்கே
என்று அமைதியாய் நின்றாய்
எத்தனை உயரத்திற்கு
சென்றாலும் உன்
அமைதி அடக்கம் பணிவு
உன்னை மேலும்
மேலும்  உயர்த்துகிறது
உன்னிடமிருந்து நாங்கள்
கற்றுக்கொள்ள அதிகம் உள்ளது...
உன் ரசிகை என்று
சொல்லும் போதே மனதில்
ஒரு வித உற்சாகம்
ஒருவித பெருமை
எனக்குள் ஏற்படும்
அ.ந. ஷமீம் பானு...