K

சொல்வதற்கில்லை..

பிரிவதாய்
முடிவெடுத்து விட்டபின்
பரஸ்பரம்
கைகுலுக்கிக் கொள்ள
நாம்
தயாராய் இல்லை
நீயோ
அல்லது நானோ
ஒருவரை
ஒருவர்
பார்த்துக் கொள்ளாமல்
இருக்க
நம் முகங்களை
திருப்பிக் கொள்கிறோம்
ஒயாது அடித்த
நம்
இருவரின்
தொலைபேசிகள்
தாமாகவே
திருப்பி விடுகின்றன
நம்
அழைப்புகளை
வேறொரு
எண்களுக்கு..
நேசித்தவைகள் எல்லாம்
அர்த்தமற்றதாய் ஆனபின்
எனக்குள் எழுகிறது ஒரு கேள்வி
காதல் என்று
எதையும்
செய்யாத நாம்
காதலர்கள்
என்றுமட்டும்
சொல்லிக்கொண்டது
எப்படி?
©kiruba