என் தாய்...
சிந்தையில் என்னை நினைத்தாய்!
அன்பின் மழையில் நனைத்தாய்!
மனதில் என்னை நேசித்தாய்!
காலமும் என்பேரை சுவாசித்தாய்!
கைகளில் என்னை அணைத்தாய்!
உறவுக் கூட்டத்தில் இணைத்தாய்!
கருவில் கருத்தாய் காத்தாய்!
தோளிலும் ஏற்றி சுமந்தாய்!
தந்தையாய் என்னோடு நின்றாய்!
தந்தைத்தரும் அறிவையும் தந்தாய்!
வாழ்வின் முதலாய் இருந்தாய்!
வாழ்வின் வாழ்வாய் வந்தாய்!
எனக்காய் அரைவாழ்வு இழந்தாய்!
தாயாய் உலகில் சிறந்தாய்!
இன்றும் நான் உனதாய்!
என்றும் நீ எனதாய்!
வாழ்ந்தாய்... வாழ்வித்தாய்... என் வாழ்வில் தாய்...
அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா!...
©luisamary
L