R

இரவின் திமிர்

இந்த இரவுகள் என்னை தின்னுதே
இமைகள் இடையிலே ஊசி நுழையுதே
பிரல்வதிலேயே நேரம் சுழன்று
பிடறி மண்டையில் பிற்காலம் தெரிந்து
உளறல் சத்தமாய் என் உள்ளம் மறுகுதே
இரவின் இருளிலே இறைவன் வாழ்கிறான்
அன்றாட தவறினை உணர செய்யவே
இமைகள் நடுவிலே
உறக்கம் பறிக்கிறான்
இரவு என்பதும் இறக்கமற்றது
தூக்க வேலையில் துக்கம் கொடுத்து
தூக்கில் போடுது
விடியும் வரையில்
மரணம் கொடுத்து
அதிகாலைவேளையில்
உயிரை கொடுக்குது
தூக்கம் கிடைத்ததும்
கனவில் வாழ்கிறோம்
கனவு கலைந்ததும்
நிஜத்தில் வாழ்கிறோம்
நிஜத்தில் மறித்து தூக்க கனவிலும்
கனவில் மறித்து நிஜத்தின் கனவிலும்
வாழும் இரட்டை பிறவியில்
உண்மையில் எது நாம்???
©raajanand