V

காதலின் காத்திருப்பு

காதலின் ஆழம் உன் வரவிற்கு
காத்திருக்கையில் உணர்கிறேன்
காத்திருக்கும் நிமிடங்களும் கனவுகளே
உன் கரம் கோர்க்கும் காலத்தை எண்ணி
ஆம் உயிரே என் உணர்வுகளை
உதடுகளால் மொழிபெயர்ப்பது எப்படி?
கற்றுக் கொடு எனக்கும் உன்னைப் போல்
கண்களால் கவிதை படிக்க..
காத்திருப்பும் சுகமே உன்னுடன் பயணிக்கும் நிமிடங்களை எண்ணுகையில்
காற்றுடன் உன் கரங்களும் வருட வரும்
என் குழல் களைத்து விளையாட
கனவுகளில்......
©visnuhp