F

கோபம்

எழுதியவர் ஸமீனா நுஃமான்.
மனித இயல்புகளில் ஒன்று தான் கோபம். இதனை வாழ்க்கையில் தொடர்ந்து பயன்படுத்தினால் நோய் உங்களுக்கு தான். "கோபம் என்றால் என்ன தெரியுமா? புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு சுடு சொல் எனும் வார்த்தையால் பிறர் மனதை காயம் செய்வது தான் கோபம்." பிறர் மனதை மட்டும் அல்ல உங்கள் மனதையும் தான் காயப்படுத்திக் கொள்கிறீர்கள்!
மேல் உள்ள மேற்கோளை வைத்து பார்த்தால் நீங்கள் எத்தனை பேரை காயப்படுத்தி இருப்பீர்கள்? சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே!
இவ்வாறுதான் ஓர் இளைஞன் இருந்தான்.அவன் பெயர் மோகன். அவனுக்கு ஒரு சின்ன தவறு நடந்தாலும் கோபத்தில் எல்லோரையும் சுடு சொல்லால் பேசி திட்டி முடித்துவிடுவான்.கோபம் தனிந்த பிறகுதான் யோசிப்பான் இப்படி எல்லாம் பேசிவிட்டேனே என்று.
இப்படியே அந்த இளைஞனின் காலமும் போய்கிட்டே இருந்தது....
ஒரு நாள் மோகன் வேலை செய்து முடித்து விட்டு மாலையில் வீடு சென்று கொண்டிருந்தான். அங்கு அவன் வீட்டு பக்கத்து வீட்டின் அம்மாள் அவனைப்பற்றி தனது மகனோடு பேசிக் கொண்டு இருந்தார்கள்... மோகனும் தன்னைப் பற்றிதான் கதைக்கின்றார்கள் என்று மனதில் நினைத்து நின்று கேட்களாயினான்.
அப்போது... அந்த அம்மாள் அவள் மகனுக்கு, மகனே! நீர் யார் கூட வேண்டாலும் நட்பு வைத்துக்கொள். ஆனால் மோகனோடு நட்பு வைப்பதை தவிர்த்துக் கொள்! காரணம் அவன் அதிக கோபம் உடையவன் பிறர் மனதை காயப்படுத்துவதில் மாமன்னன் அவனோடு நீயும் நட்பு வைத்தால் உனக்கும் கெட்ட பெயர்தான். நல்ல குணங்கள்,பழக்கவழக்கங்கள் உள்ளவர்களுடன் நட்பு வைத்துக்கொள் மகனே! கல்வியும் தானா வளரும் என்று அந்த அம்மாள் கூறி முடித்தாள். பிறகு மோகனும் அங்கு இருந்து வீட்டிற்கு போய் நுழைந்தான்.
அந்த இரவு முழுவதும் மோகனுக்கு தூக்கம் இல்லை. என்னை பற்றி எல்லோரும் தப்பா புரிந்து கொண்டார்களே! என்று அழுது புலம்பினான்,என் கோபத்தை எவ்வாறு அடக்குவது என்று நினைத்து நினைத்து காலையும் ஆகிவிட்டது.
என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே... அவன் வேலைக்கு சென்று கொண்டு இருந்தான்.
செல்லும் பாதையில் அவனுக்கு எதிராக அவனது குருவைக் கண்டு அவரோடு பேசிக் கொண்டு இருந்தான்.அப்போது அந்த குரு...என்னபா மோகன் இவ்வளவு சோகமாக இருக்கின்றாய்? என்று அவர் கேட்டதும் மோகன் சொல்ல தொடங்கினான்...இல்லை குருவே, எனக்கு அதிகம் கோபம் வருகின்றது,அதை எவ்வாறு அடக்கிக்கொள்வது, என்று தான் யோசிக்கின்றேன் இதற்கு ஒரு மருந்து இல்லையா? என்று குருவிடம் கேட்டான். குருவும் அதற்கு சிரித்துக் கொண்டு...
மருந்து ஒன்றும் தேவையில்லை நான் சொல்வதை நீ செய்து பார் உனக்கு கோபம் வருவது குறைந்துவிடும் என்றார். மோகனும் என்ன? என்று கேட்டான். அதற்கு குரு உனக்கு கோபம் வரும் போது எல்லாம் சுவரில் ஆணி அடித்துவா என்றான். மோகனும் எதிர் கேள்வி கேட்காமல் அவ்வாறே செய்ய ஆரம்பித்தான்.
இப்படியே இரண்டு மாதங்கள் கழிந்தன... ஒரு நாள் மோகனே போய் குருவை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து சுவரைக் காட்டி, நீங்கள் சொன்னது போன்று நானும் செய்து வைத்திருக்கின்றேன். குருவே...இதற்கான அர்த்தம் தான் என்ன? என்று மோகன் கேட்டபோது, குரு அவன் முகத்தை பார்த்து மோகா... இந்த சுவரிற்கு எத்தனை ஆணி அடித்து இருக்கின்றாய்? என்று கேட்டார்.மோகனும் எண்ணிவிட்டு நூறு ஆணிகள் என்றான். அதற்கு... குரு இது வெறும் ஆணிகள் மட்டுமல்ல கோபத்தின் மூலம் நீ கொட்டும் வார்த்தைகள். அந்த ஆணிகள் அனைத்தையும் எடுத்து விட்டு பார் எத்தனை சிற்கள் என்று. அது வெறும் சிற்கள் மட்டுமல்ல பலர் மனதில் உள்ள ஆற முடியாத காயங்கள். யோசித்து பார் மோகா? எத்தனை பேரை நீ காயம் செய்து இருக்கின்றாய் என்று சொன்னதும். மோகன் தான் செய்த "முல் இல்லாத நாக்கின் மூலம் பேசும்" தப்பை உணர்ந்து குருவிடம் இனி இப்படி நடக்காது நீங்கள் எனக்கு புரிய வைத்ததற்கு நன்றி குருவே! என்று சொல்லி...
உடனே வெளியேரினான் கோபத்தின் மூலம் காயம் செய்த மனிதர்களை பார்த்து மன்னிப்புக்கேட்க... அதற்கு பிறகு அந்த ஊர்மக்களே அவனைப் புகழ்ந்து பேச ஆரம்பித்தன.
ஆகவே நீங்களும் இப்படி கோபம் உடையவர்கள் என்றால்.அதனை குறைத்துக் கொண்டு அடுத்தவர் மனதை புரிந்து நடந்து கொள்ளுங்கள். "கல்லால் அடித்தால் புண் மறைந்துவிடும் சொல்லால் அடித்தால் காயம் மறையாது" நண்பர்களே!.
"கோபத்தை அடக்கி வாழ்ந்தால் உறவுகள் உனக்கு பலர் ஆகிவிடும் நண்பா."
நன்றி!😊
©f_sameena