உடலில் மாற்றம் வேண்டும் கடவுளே!
பெண் விருப்பம் மீறி உள்நுழையும்
உறுப்பு தானாக சிதைவு காணும்படி
சட்டத்தில் மாற்றம் வேண்டும் அரசே!
ஒப்படையுங்கள் காமனை கரடியிடம்
உத்தரவிடுங்கள் கரடிக்கு காம வேட்டையாடும் படி
சமூகத்தில் மாற்றம் வேண்டும் ஆணினமே!
பெண் என்றால் தவறாக பார்க்கும் உள்ளம்
மனைவியை தவிர பிறரை தாயாக பார்க்கும்படி
மனதில் மாற்றம் வேண்டும் மாதரசியே!
ஆடையை உரித்தால் கண்ணீர் வடிக்கும் மனம்
உரித்தவனை நகம் கொண்டு குருதி வடியச்செய்யும்படி...
©priyathiya
P