கட்டுக் கட்டாய் கதை அடுக்கி
சொட்டுச் சொட்டாய் நான் கூற
கண் இமைக்க நேரமில்லா கதை பேசி
களைத்துப்போன நாட்கள் அவை....
பகல் வந்த தாமரை பகலவனோடு சுருங்கிப்போன கணமாய்
மாறைந்து போன அந்நாட்கள்
ஆறாத ரணங்களாய் இன்னும் என்னுள்...
மீண்டும் மீண்டும் என் தவிப்புகள் அவளிடம் அர்த்தமற்றுப்போக...
துணியால் கண்ணையும் கட்டி
கையை காற்றில் நீட்டி
இன்னும் தேடிச்செல்கிறேன்
தொலைந்து போன என் சிரிப்பை தேடி........
©ijasahamed
I