M

மிதமாய் மிதக்கிறேன்

மேகம் மறைத்த நிலவாய் ,
மின்னல், ஓரப் பார்வை தந்த,
அன்றில்,
நான் செல்லும் பாதை கண்டு,
புயல் வேகம், கொண்டு வந்து,
தென்றலாய், எனை நீங்கிய
. அன்றில்,
வான் ஒளியாய் தோன்றி,
சாரல், மழையாய் மாறி
வெட்க்கம் மறைத்த,
சிரிப்பில், நனைந்து சாய்ந்த
அன்றில்,
தயக்கம் தாங்கிக் கொண்டு,
முகம், சிவந்து, என் முன் வந்து,
ஓர் ஏக்கப் பார்வை தந்து,
முதல் மொழிதல் செய்த
அன்றில்,
பழகிய நாள் முதலாய்,
பாசம், சற்றும் குறைக்காமல்,
என் நலம் காண, தினம்
உன் வளம் கொண்டு,
நேசம் வீசும்,
உன் உள்ளம் கண்ட ,
அன்றில்,
மாலை அந்தி நேரம்,
நாம் தனித்து,
வெளியே சென்ற நேரம்,
சாலை கடக்கும் வேலை,
நம் கைகள் சேர்ந்த நேரம்,
நான் சிலைத்திருக்க,
நாம் சாலை, கடந்த
அன்றில்,
சாலை கடந்த பின்பும்,
நான் நினைவில் இல்லை,
ஏன் என திகைத்திருந்தேன்,
என் நினைப்பில் மட்டும்,
காரணம் அறிந்து கொண்டேன்,
கைகள் விலகவில்லை,
மாறாய் பினைந்திருக்க ,
என் நெஞ்சம்
அன்றில்,
அது ஒரு முழு நிலவுக் காலம்,
நான் தனியேன இருந்தேன்,
உன் நினைவுகள், எனை தகர்க்க,
நம் செய்த பயணம்
அன்றில்,
நாம் இணைந்திருக்க,
தயக்கம் கலந்திருக்க,
ஈர் இருக்கையில்,
ஓர் அமர்வென திலைதிருக்க,
தயக்கம் சரித்து, மெதுவாய் நகர்ந்து,
உன் மேல் பனியாய் படர்ந்த தருணம்,
நீ என்னில், அலையென மிதந்த தருணம்,
இரு பார்வைகள் ,ஒரு பொருளாக,
இதயமும், அதிர்ந்தே மிதமாக
இறுதியில் துடிப்பதை மறந்தே,
இதழ் இணைந்து போன,
நொடி, மணி, தினம் முதலாய்,
அன்றிலிருந்து
மிதமாய் மிதக்கிறேன்




©mg94