என்னை
ஏற்றிக்கொண்ட
தொடர்வண்டியின்
என்ஜினும் ஓட்டுநரும்
முடிவில்
இறங்கியதும்...
ஓட்டை என்ஜினை
ஐய ஓட்டுநர்
இழுத்துச் செல்ல...
கூடிய பெட்டிக்கு
வாழ்வுணர்த்த
இடைநில்லா
தொடரோட்டம் செய்து...
சக்கரம் தேய்ந்து
சாக்காடு நோக்கி...
...நீ...
...ண்...
...ட...
இ...டை...வெ...ளி...க்குப் பிறகு
நிச்சயமான
நிம்மதி தேடி...
உமது மடி நாடி...
வரத்துடிக்கிறது...
என்
வெந்துபோன நெஞ்சம்!
உம்மிடம் கேட்கிறது தஞ்சம்!!
-prp
©overmorrow
T