M

ஞாயிறு மறந்த திங்கள்

திசைகள் யாவும் மறைந்திடும்
கார்துருவங்கள் புதிதாய் உதித்திடும்
நேரம் நகர்ந்திட மறுத்திடும்
இந்நேரம் இருளே என் உறைவிடம்
செயல்கள் யாவும் செயலற்றுப் போக
செயலற்ற செயலாய் நான்,
சிந்தையில்,
நாம் சிரித்த நினைவுகளும்,
விந்தையில்,
நான் ரசித்த நினைவுகளும்,
ஒருசேர உதிர்ந்து விழுந்ததடி
என் விழிகள் வழியாக
இருளில் ஓர் இசை கேட்கிறேன்
ஆயிரம் முறை அதை கேட்கிறேன்
ஆயினும் ஈர்ப்பு குறையவில்லை
அதிலே முழுவதும் நம் நினைவு,
இசை இதழ்களில் உன் ஞாபகம்
இசை மொழிகளில் உன் கண் ஞாபகம்
மெதுவாய் மூழ்கிப் போகிறேன்
எனையே தாண்டிப் போகிறேன்
என்னவளை தேடிப் போகிறேன்
இமை மூடியே நாடிப் போகிறேன்
உறவில் புரிதல் மறந்த நேரம்
வீண் வார்த்தைகள் அதிகம் கூடும்
மனம், மௌனம் தேடிப்போகும்
தெரிந்தே தனிமையை நாடும்
கோபம் துணை சேரும்
காயம் வலி மீட்டும்
துணையும் வலியும் அழுத்தம் தரும்,
அழுத்தம் அன்பை இரையாக்கும்
அன்பைத் தின்றே பசி தீர்க்கும்
முடிவில்,
ஞாயிறு மறந்த திங்கள்
MG
©mg94