அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு என் சிறு கருத்தை உங்களிடம் முன்வைக்கின்றேன்.
பணம்,
நான் கூற வந்த விடயமே பணம்தான். வாழ்க்கையில் எந்த கட்டத்திற்கு போனாலும் முதலில் கேட்பது பணம்தான். பணம் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற முடியாதா? வாழ்க்கையை சாதிக்க முடியாதா? இப்படி மனதிற்குள் கேள்வி கேட்கும் போதுதான் ஏழைகளின் வாழ்க்கை துயரம் புரிகிறது.
"பணம் இருந்தால் பதவியை பெற்றுக்கொள்ளலாம் பணம் இல்லாவிட்டால் ஏழைகளின் வாழ்க்கை முற்றுப்புள்ளியா?"
பணத்தோடு பிறந்தவர்கள் ஏழைகளின் வாழ்க்கையை கண்டுப்பதில்லை. ஆனால் ஏழையாக பிறந்தவர்கள் பணத்திமிரால் வாழும் மனிதர்களைக் கண்டு வியந்து போகிறார்கள். பணம் என்பது மனிதனை ஆட் கொள்ளும் ஓர் காகித நோய்!. இதை அறியாமல் தான் சிலர் பணத்தின் பின்னால் ஓடுகின்றார்கள். பணத்தை கண்டு பிடித்ததும் மனிதன்தான். கண்டு பிடித்த மனிதனுக்கு இங்கு மதிப்பு இல்லை பணத்திற்குதான் மதிப்பு... ஆக ஏழைகளின் கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு பணம் உள்ளவர்கள் உதவி செய்ய முன்வாருங்கள். அவர்களின் இலட்சியங்களுக்கு கை கொடுங்கள்.
"ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல பண்பு இருந்தால் பணம் எனும் காகிதத்தை விட்டொழித்து மனம் எனும் மனித தூய எண்ணத்தை வென்றுவிடலாம்".
"பணத்தை நம்பி நல்ல மனிதர்களை வாழ்க்கையில் இழந்து விடாதீர்கள்!. என்று கூறிக்கொண்டு என் கருத்தை முடிக்கின்றேன்.
என் கருத்து உங்களுக்கு பிடித்து இருந்தால் பகிருங்கள்.
நன்றி!
எழுதியவர்: ஸமீனா நுஃமான்.😊
©f_sameena
F