முகம் மட்டும் அறிகிறேன் ,
அவள், முகவரி நினைவில் இல்லை,
நான், தனிமையில் தவறிவிட்டேன்
இங்கு, மீட்டிட எவரும் இல்லை,
ஒளி, மங்கும் பொழுதினிலே,
தென்றல், என், உடன் இருந்தும்
என் திங்கள் தேடுகிறேன்,
சென்ற திங்கள், நாள் முதலாய்,
யாவும் செய்திடுவேன்,
என்னவள் நெஞ்சில், சேர்ந்திடவே
நாம் சேர்ந்த நேரங்களில்,
நேரம் போதவில்லை,
நீ,
சிறு தூரம் சென்றதுமே,
நேரம் எனை சூழ,
அந்த நேரமும், உணர்ந்ததடி
என் தேவதை, நீ என்றே
உன்னை, நினைக்கா நொடிகள் இல்லை,
உன்னில் விழுந்த, நாள் முதலாய்
தினப்பொழுதுடன் ,
போர் செய்கிறேன் ,
என்னவளின் உயிரில், எனை சேர்க்க
©mg94
M