S

வறுமையின் நிறம்

வறுமையின் நிறம்
வறுமை ஒரு அபாய ஒலி
பால்பொங்க வைக்கும் அடுப்பதனிலே
பூத்திருக்கிறது பத்து காலான்கள்
பத்தியெரியிது வயிரும் வாட்டும் பசித்தீயாலே
வறுமை ஒரு அபாய ஒலி
கொடியது வறுமை இளமையிலேயே
கொல்லும் பல உயிர்களை மனத்தாக்கமே
கொள்ளை, குற்றங்கள் பெருகிடுமே !
குற்றங்கள் பெருகிடுமே !
வறுமை ஒரு அபாய ஒலி
தாமொண்டு தன் நலமொண்டு
தலைக்கனமாய் கருதிய கருமித்தனத்தால்
தானதர்மம் இல்லாமல் விழைந்த சாபக்கேடிது
வறுமை ஒரு அபாய ஒலி
உயிருண்டு மனக்கனவுகளுருக்கி
உள்ளங்கள் பல சிதைத்து
உருவான வறுமையின் நிறம் சிவப்பே!
உருவான வறுமையின் நிறம் சிவப்பே!
©salma_mush