இந்த...
தனிமை வித்து
என்
உள்ளும் புறமும்
துளிர்த்து மரமாகி
வளர்ந்தோங்கிய
நேரம்பார்த்து...
என்னுள் உன்னை
விதைத்து,
மரமென்ன...
அந்த மலையென்ன...
மேலே...வானையும்
கீழே...பாதாளத்தையும்
தாண்டி...
தழைத்தோங்கி,
சிறகில்லா பறவைக்கு
வண்ணச்சிறகு பரிசளித்து,
திடீரெனக்
காணாமல் போகவே...
பறக்க மறந்த பறவையாய்
சிரிக்கத்தெரியாத சிட்டாய்
சிதறிக்கிடக்கிறேன்...
இந்தத் தனிமையின் சிறைக்கம்பிகளுக்குள்...!
-prp
©overmorrow
T